சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின்படி விராலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இழுப்பபட்டை பகுதியில் வசிக்கும் அஜித்குமார் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த ஜெகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணலை திருடி அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.