கார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் அமைந்திருக்கும் கார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபா தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி கொலுசு, 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து பிரபா இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.