Categories
மாநில செய்திகள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை என்ன என ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அந்த குழந்தைகளின் கல்வி, உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க பெற்றனவா? எனவும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |