தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதனால் கோபம் அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரஹ்மானியா பகுதியில் பிரம்மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் எதிர் பக்கத்தில் உள்ள முட்புதரில் தீ வைத்து எரிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் அவர் பிரம்மயா என்பதும் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவர் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.