Categories
தேசிய செய்திகள்

அடடே! அப்போது துப்புரவு தொழிலாளி…. இப்போது உதவி கலெக்டர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிப்பவர்  ஆஷா காந்தாரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துப்புரவு தொழிலாளியான இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து படித்து வந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் இவரை பிரிந்து சென்றதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2019 ஆம் வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியுள்ளார்.

இதையடுத்து தேர்வு முடிவுகள் வரத் தாமதமானதன் காரணமாக இரண்டு வருடம் கழித்து இப்போது இவர் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். பெண்கள் தங்களின் வாழ்வில் நினைத்த இலக்கை அடைய வேண்டுமானால் விடா முயற்சியும், துணிச்சலும் மிக அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

Categories

Tech |