இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது .
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 85 ரன்கள் மற்றும் ரிஸ்வான் 63 ரன்கள் என இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 233 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கததால் விக்கெட்டுகள் சரிந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் தனியாளாக போராடிய லிவிங்ஸ்டோன் 9 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்த விளாசி 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 201 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது . இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.