Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றோரை எந்த வயது ஆனாலும் அவர்களை ரசிப்பதற்கென்றே மிகப் பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால் சில ஹீரோக்கள் சிறுவயதில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் சற்று வயது முதிர்ந்த உடன் அவர்களின் மேல் உள்ள எதிர்பார்ப்பு குறைந்துவிடும்.

இந்நிலையில் 82 வயதைத் தொட்டிருக்கும் கவுண்டமணி மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கவுண்டமணி தன்னுடைய 75 வயதிலேயே அரசியல் அதிரடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 49-ஓ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதற்கு சுமாரான வரவேற்பு கிடைத்ததோடு எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்நிலையில் அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.

Categories

Tech |