மனைவி இறந்த மன வேதனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகில் துரைசாமி என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்திரை கனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் சித்திரை கனி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் துரைசாமி தன்னுடைய மகன் விஸ்வநாதன் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். எனவே தனது மனைவி சித்திரை கனி இறந்ததில் இருந்து துரைசாமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்நிலையில் மாலை வேளையில் துரைசாமி மனைவியின் கல்லறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கல்லறையின் மேல் அமர்ந்து மதுவில் விஷம் கலந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் சிலர் துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துரைசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகன் வில்வநாதன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.