கொரோனா காலகட்டத்தில் மற்ற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கனடாவில் வசித்து வரும் ஒருவருடைய தாய் கணையப் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனட நாட்டில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள். இவருடைய தாய் இலங்கையில் பிறந்துள்ளார். இதனால் sharon னின் பெற்றோர்கள் இலங்கை நாட்டிற்கு செல்வதற்கு முடிவு செய்து 6 மாதத்திற்கு முன்பாக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் கனடா நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பாக இலங்கையில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் கடுமையாக போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜூலை மாதம் பெற்றோர்கள் கனடா நாட்டிற்கு வந்து இறங்கியதும் sharon னின் பிள்ளைகள் தன்னுடைய தாத்தா பாட்டியை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இதற்கிடையே இந்த கொடூர கொரோனா காலகட்டத்தில் மற்ற நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் sharon னின் தாய் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து sharon தன்னுடைய தாயை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அவருடைய நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திடீரென sharon னின் தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் sharon தாயின் இறுதி சடங்கிற்கு கொரோனா கட்டுப்பாடுகளால் அவருடைய உறவினர்கள் நேரில் வராமல் நேரலையில் கலந்து கொண்டுள்ளார்கள். இதனையடுத்து தன்னுடைய தாயின் மரணம் அவருடைய குடும்பத்தையே கண்கலங்க வைத்துள்ளது.