Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இதான் கதி…. வாலிபர்கள் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முருகன் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சுத்துறை, முத்து, அருணாச்சலம், இசக்கி, பாண்டி, சங்கரலிங்கம் போன்றோறும் பல்வேறு கொலை சம்பவங்களில்  ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கொலை வழக்கில் ஈடுபட்ட இந்த வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் இதற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் இந்த வாலிபர்களுக்கு சிறை அலுவலர்கள் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |