சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஆடிப்பெருந்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் கருடாழ்வாரின் படம் கோவிலின் பிரகாரத்தில் வலமாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாள் அனுமார் வாகனத்தில் வீதி உலா நடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பெருமாள் திருக்கல்யாணம் வரும் 22 – ம் தேதியும், முத்து பல்லாக்கு ஊர்வலம் 26 – ம் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாலதி, கோவில் தக்கார் மகேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.