டீக்கடையில் வைத்து முதியவரிடம் மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் வசந்த புரத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.