Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நடந்திருக்கும்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திடீரென பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கரை பகுதியில் ஷமிலுதீன்-நஸ்‌ரீன்  என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் பிரசவத்தின்போது நஸ்‌ரீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குழந்தையை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எனவே நஸ்‌ரீன் இறந்த பிறகு அவரது குழந்தைக்கு நசீபா என்று பெயர்சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். அதன்பின் 2019 ஷமிலுதீனின் அப்ஷானா என்ற பெண்ணை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் குழந்தை நசீபாவை ஷமிலுதீனும்- அப்ஷானாவும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தை நசீபா வீட்டில் இறந்து கிடப்பதாக ஷமிலுதீன் தங்கையின் கணவர் முகமதுஷாகீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்  குழந்தை நசீபாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |