Categories
உலக செய்திகள்

சிறுவனை கடத்திச்சென்ற மர்மநபர்.. விவேகமாக செயல்பட்டு காப்பாற்றிய தாய்.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் பகல் நேரத்தில் அம்மாவுடன் சென்ற சிறுவனை மர்மநபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Queens என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலையில் Dolores Diaz Lopez என்ற 45 வயதுடைய பெண் தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து ஒரு குழந்தையை தூங்கி வாகனத்தில் ஏற்றி விட்டார். இதனால் பதறிப்போன Dolores, “கடவுளே என் குழந்தை” என்று அலறியபடி அவரைப் பின் தொடர்ந்து ஓடினார்.

அந்த நபர் குழந்தையை வாகனத்தில் உட்கார வைத்துவிட்டு அவர் ஏறுவதற்குள், Dolores அடுத்த பக்கத்தின் கண்ணாடி வழியாக சிறுவனை இழுத்து வெளியே கொண்டு வந்துவிட்டார். இதனால் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றுவிட்டார். இக்காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. எனவே காவல்துறையினர் அந்த நபருடன் வந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |