Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’… செம ரொமான்டிக்கான ‘பயணம்’ பாடல் ரிலீஸ்…!!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்ற பயணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எப்.ஐ.ஆர் படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று எப்.ஐ.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘பயணம்’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அழகிய ரொமான்டிக் பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |