இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதைத்தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் நீண்ட காலமாக ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது .
இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஜெயில், பேச்சுலர், 4G, ஐங்கரன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் .