மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம்பெண் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.