வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென்று அவர் வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கயிற்றால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சுஜித் பேகராவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.