நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட பூஜை வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நேற்று விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
Day one of VIKRAM. Felt like a High school reunion.
In the past 50 years this is the longest I have been away from film shootings. Many film makers have not seen action for nearly a year. (1/2)https://t.co/WTM7mqHKia— Kamal Haasan (@ikamalhaasan) July 17, 2021
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விக்ரம்’ பட பூஜை வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘விக்ரம் முதல் நாள் படப்பிடிப்பு. ஒரு உயர்நிலை பள்ளியில் மீண்டும் இணைந்ததை போல உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் நான் திரைப்பட படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுதான். பல திரைப்பட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்பையும் நடத்தவில்லை. எங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படப்பிடிப்பில் பணிபுரிய விக்ரம் படக்குழுவினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.