Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை …. விவசாயிக்கு நடந்த சோகம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய பொருட்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் விரிப்பை வாங்க பொன்னேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ,திருவெள்ளைவாயல் இலவம்பேடு  நெடுஞ்சாலையில் வேளூர் கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தார் .

அப்போது  மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே  உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து  வழக்குப் பதிவு செய்த காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |