Categories
உலக செய்திகள்

20 வருடங்களுக்கு அப்புறம் வந்துருக்கு…. மங்கிபாஸ் வைரஸ் தொற்று…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்…!!

அரியவகை வைரஸ் தொற்றானது நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் உறுதிசெய்துள்ளது.

அமெரிக்கா  நாட்டில் டெக்ஸாஸ் மாகாணத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் லாகோஸ் நகரிலிருந்து நைஜீரியா, டல்லாஸ் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனை செய்ததில் மங்கிபாஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நோய் தொற்று குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் “இவர் டல்லாஸ் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த நோயானது காய்ச்சலை உண்டாக்கி சிறிய கட்டிகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பின்பு உடல் முழுவதும் பரவி 2 முதல் 4 வாரங்கள் நீடிக்கும். இது பெரியம்மை நோயுடன் தொடர்புடையது. இந்த சம்பவம் அரிதானது என்றாலும் தீவிர தன்மை வாய்ந்ததாக இருக்கும்” என தெரிவித்துள்ளனர். மேலும் இவருடன் பயணம் செய்தவர்களை சுகாதார அதிகாரிகள் தொடர்பு கொண்டு வருவதாக கூறியுள்ளனர். இந்த வைரஸ் தொற்றானது 20 ஆண்டுகளுக்கு பின் பரவியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Categories

Tech |