Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் நடத்திய முகாம்… ஆயுதப்படை வளாகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…!!

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மொத்தம் 64 போலீசார் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியுள்ளனர்.

தேனியில் நேற்று மாவட்ட காவல்துறையினர் சார்பில் ஆயுதப்படை பிடிவு வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து ரத்தங்களை சேகரித்துள்ளனர். இந்த முகாமை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோன்கரே தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், தனிப்பிரிவு காவல்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் காவல்துறையினர் என 64 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்துள்ளனர். மேலும் ரத்தம் வழங்கிய அனைவரையும் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |