Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் ரக்சனுக்கு ஜோடியாக வரும் ஆங்கர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். வெங்கடேஷ் பட், செப் தாமு இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை ரக்சன், அறந்தாங்கி நிஷா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர்.

4 வாரம் பெட்-ரெஸ்ட்டுக்கு பின் மணிமேகலையின் சாலையோர டான்ஸ்: வீடியோ வைரல் -  Tamil News - IndiaGlitz.com

இதையடுத்து 2-வது சீசனை ரக்சன் மட்டுமே தொகுத்து வழங்கினார் . இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் கோமாளியாக வந்து ரசிகர்களை கவர்ந்த மணிமேகலை மூன்றாவது சீஸனில் ஆங்கராக இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |