அம்பேத்கார் சிலை உடைப்பில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் உள்பட 11 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25_ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிக்கப்பட்டு அதற்க்கு எதிர்வினையாற்றும் வகையில் அங்கிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது.
மேலும் அம்பேத்கார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டனர்.முக்குலத்து புலிகள் அமைப்பு தலைவர் சரவணன், வேங்கை தமிழ்ச்செல்வன் உள்பட கைதான 11 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.