Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டரில் எழுதப்பட்டிருக்கும்…. இந்த குறியீடு எதற்காக தெரியுமா…? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது.

நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி செய்து விடுவார்கள். இவ்வாறு டெலிவரி செய்யப்படும் கேஸ் சிலிண்டர் காலாவதி தேதி எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A  என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம்.

Categories

Tech |