ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் பாகிஸ்தானில் கடத்தப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டு தூதர் நஜிபுல்லா, அவரது மகள் சிசிலா அலிகில் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் இருந்து வந்த நிலையில் அங்கு அவர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் ஆப்கானிஸ்தான் தூதரும் அவருடைய மகளும் அந்த கடத்தல் கும்பலால் துன்புறுத்தப்பட்டு அதன் பிறகே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இருவரும் கடத்தப்பட்டதற்காக கடும் கண்டனத்தை முன் வைத்துள்ளது.