Categories
தேசிய செய்திகள்

உங்க பொண்ணு மட்டும் போதும்… தாலி கட்டிய கையோடு… “50 பவுன் நகையை திருப்பி கொடுத்த மணமகன்”…!!!

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் சூழலில் திருமணம் முடிந்த மணமகன் ஒருவர் மணமகள் வீட்டிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரளாவில் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்புத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார். ஆலப்புழா என்ற இடத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் நாதஸ்வர இசைக் கலைஞர், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் சுருதிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது தனக்கு வரதட்சணை வேண்டாம் என அவர் கூறியிருந்தார். கடந்த மே மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப் போனது. இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று ஒரு கோவிலில் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகளின் பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்துகொண்டு மணமகள் மணமேடைக்கு வந்தார். அப்போது மணமகன் சதீஷ் அங்கு வந்தார்.

மணமகள் அணிந்திருந்த நகைகளை பார்த்தவுடன் அவரிடம் கைகளில் இரண்டு வளையல்களில் தவிர மற்ற அனைத்து நகைகளை கழட்டி பெற்றோரிடம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் அனைத்தையும் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டிய தாலியுடன் மணப்பெண் ஸ்ருதியை மனைவியாக ஏற்றுக் கொண்ட மணமகன் சதீஷின் செயலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Categories

Tech |