இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னர் மாளிகையில் இருந்து வந்திருக்கக்கூடிய அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சித் தலைவரை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ்பவனில் அழைத்து துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பல்வேறு விஷயங்களின் போது அவர் பேசியிருக்கிறார்.
அந்த அடிப்படையில் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக வட்டாரத்திலும் , கவர்னர் மாளிகையை வட்டாரத்திலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக IIT பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் வருகை தர இருக்கிறார். அதே போல சீன பிரதமர் தமிழகம் வர இருக்கின்றார்.இந்த நிலையில் இது குறித்த ஒரு சந்திப்பாக கூட இருக்கும் என்று தெரிகின்றது.