உங்கள் சிம் கார்டு தொலைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம், டெலிகாம் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு உங்களின் சிம் கார்டு தொலைந்துவிட்டது என்று புகார் அளிக்க வேண்டும். பின்னர், உங்களின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க டெலிகாம் ஆபரேட்டர் பல வழிகளை உங்களுக்கு வழங்குவார். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டைத் ப்ளாக் செய்ய ஏராளமான வழிகளையும் வழங்குகிறது.
அப்படி நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பயனர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது, நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை அணுகுவதன் மூலம் உங்களின் சிம் கார்டை ப்ளாக் செய்யலாம். ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் உங்களின் சிம் கார்டை ப்ளாக் செய்யலாம் அல்லது சிம் கார்டைத் தடுக்க மற்றொரு எண்ணைப் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர் பராமரிப்பு வழியாக சிம் கார்டைத் தடுக்க, ஜியோ எண்ணிலிருந்து கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணான 199 ஐ அழைக்கவும். வழிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியுடன் இணைக்கவும். நீங்கள் நிர்வாகியுடன் இணைந்தவுடன், காரணத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும், முழு பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் சில முக்கியமான விவரங்களை வழங்கவும். விவரங்கள் உறுதிசெய்யப்பட்டதும், சிம் கார்டு ப்ளாக் செய்யப்படும்.
சிம் கார்டைத் தடுக்க ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் ஜியோ எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்டை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள். ‘Settings’ என்பதைக் கிளிக் செய்து, ‘suspend and resume’ விருப்பத்திற்குச் சென்று, இடைநீக்கம் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் சஸ்பென்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
நீங்கள் ப்ளாக் செய்த ஜியோ சிம் கார்டைக் கண்டறிந்ததும், ஜியோ வலைத்தளத்தைப் பார்வையிட்டு சிம் இல் பதிவுசெய்யப்பட்ட மெயில் ஐடியைப் பயன்படுத்தி லாகின் செய்யுங்கள். ‘Settings’ என்பதைக் கிளிக் செய்து, resume விருப்பத்திற்குச் சென்று அதைக் கிளிக் செய்க. உங்கள் சிம் கார்டு சேவைகள் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும்.