Categories
ஆன்மிகம்

உங்க வீட்ல இந்த செடி இருந்த…. உடனே இத பண்ணுங்க… இல்லனா பண கஷ்டம் அதிகம் வரும்….!!!!

மணிபிளான்ட் செடி என்பது நமக்கு வருமானத்தை தேடித் தருவது. வீண் விரயத்தை குறைப்பது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி கொண்ட இந்த மணிபிளான்ட் செடியை, சில பேருக்கு வீட்டில் வைத்த பின்பு பண கஷ்டம் வர வாய்ப்பு உள்ளது. அதாவது மணி பிளாண்ட் செடியை வீட்டில் கொண்டுவந்து வைக்காத முன்பு, ஒரு வீட்டினுடைய நிதி நிலைமை சீராக இருந்திருக்கும். பணத்தை அதிகமாக சேமிக்க முடியவில்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப பணம் வருவதும் போவதுமாக இருந்திருக்கும். ஆனால் மணிபிளான்ட் செடியை வைத்த பின்பு சில பேருக்கு அது இராசியை கொடுப்பது இல்லை.

உங்க வீட்டில மணிபிளான்ட் செடி கைவைத்த பின்பு தான் கஷ்டம் வருவதாக நீங்கள் உணர்ந்தால், அந்த மணிபிளான்ட் செடியை உங்களுக்கு ராசியான செடியாக மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் கஷ்டம் வரும் என்று சொல்லவில்லை. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சில பேருக்கு மணிபிளான்ட் செடி ராசி தருவது கிடையாது.

எந்த ஒரு சமயத்திலும் தோல்வியை கொடுக்காத, வெற்றியை மட்டுமே அடுத்தவர்களுக்கு கொடுக்கும் சக்தி வெற்றிலைக்கு உண்டு. வெற்றியைத் தரும், இந்த வெற்றிலையை, நீங்கள் வைத்திருக்கும் மணி பிளான்ட் செடி தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால், உங்கள் வீட்டில் பணக் கஷ்டங்கள் குறைய தொடங்கும். மணிபிளான்ட் செடி உங்களுக்கு ராசியாக மாறிவிடும். ஒரு பாட்டிலுக்குள் தண்ணீரை ஊற்றி, மணி பிளாண்ட் செடியை வளர்ப்பவர்களுக்கு, தண்ணீருக்குள் வெற்றிலையை போட்டு வைத்துக்கொள்ளலாம். வெற்றிலை வாடியவுடன் மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மணி பிளாண்ட்டை தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், ஒரு வெற்றிலை கொடியை அந்த மணி ப்ளான்ட் செடியோடு சேர்த்து வளர்த்து வரலாம். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு அந்த மணி பிளான்ட் வெற்றியை கொடுக்க ஆரம்பித்துவிடும்.இதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது உங்கள் வீட்டிற்கு உள்ளேயும், அழகிற்காக கூட தலையைக் கீழே தொங்க வைத்து இருப்பது போல, கீழ்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் பூக்களை அழகிற்காக கூட வளர்க்கக்கூடாது. இப்படிப்பட்ட பூக்கள், அதாவது தலை கவிழ்ந்து சோகமாக இருக்கக் கூடிய பூக்களானது உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை உண்டு பண்ணி விடும் என்ற ஒரு கருத்தும் உண்டு. முடிந்தவரை இப்படிப்பட்ட பூக்களை வளர்க்காமல் இருப்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு சிறிய கண்ணாடி பௌலில், தண்ணீர் நிரப்பி, அதன் உள்ளே வெற்றிலையை காம்போடு மூழ்க வைத்து, வரவேற்பறையில் வைத்திருந்தால், உங்கள் வீட்டிற்குள் வருபவர்களுடைய கண்திருஷ்டியை அந்த வெற்றிலை இழுத்துக்கொள்ளும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது பச்சை நிறத்தை பார்ப்பவர்களுடைய கண்கள், வெளிப்படுத்தும் பொறாமை, கண்திருஷ்டி, வயிற்றெரிச்சலாகவே இருந்தாலும் அது, நம்மை தாக்காது என்பது தான் இதற்கு அர்த்தம்.

இப்படி செய்தால் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியால் உங்கள் வீட்டிற்கு பண கஷ்டம் வராது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டிலும் இந்த சின்ன சின்ன மாற்றங்களை எல்லாம் கொண்டு வந்து பாருங்கள், நிச்சயமாக வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உங்களால் நிச்சயம் உணர முடியும்.

Categories

Tech |