இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் சையத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா குறைந்து வந்ததால் வரும் ஜூலை 20 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தளர்வுகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு தரப்பில் தளர்வுகளை அமல்படுத்தும் முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் சையத் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே ஜாவித் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டிற்கு சென்றார் என்றும் ஆனால் அவரை சந்தித்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜாவித் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.