Categories
மாநில செய்திகள்

குட்கா விற்பனை ஜோர்….காவல்துறை இருக்கிறதா?… துணைப் போகிறதா?…. ஸ்டாலின் ட்வீட்….!!

குட்கா விற்பனை ஜோராக நடக்கின்றது, காவல்துறை இருக்கிறதா? அல்ல துணைப் போகிறாரா? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தீங்கும் விளைவிக்கும் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஏற்கனவே கடுமையாக விமர்சனம் செய்தது.மேலும் குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் DGP ராஜேந்திரன் உட்பட பலர் மீது திமுக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் DGP T.K.ராஜேந்திரன் வரை மாமூல் பெற்ற #GutkhaScam வழக்கை CBI விசாரிக்கும் நிலையிலும் குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது. காவல்துறை இருக்கிறதா? அல்லது இப்போதுள்ள DGP-யும் இதற்கு துணைப் போகிறாரா? சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

 

Categories

Tech |