மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்ராஜ் வேலையை முடித்துவிட்டு தட்டார்மடத்திலிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சண்முகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்ராஜ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறி வேகமாக சென்று அங்குள்ள வீட்டு சுவரின் மீது மோதி விட்டது.
இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்ராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.