மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்களை தொழிலாளியிடமிருந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான கணேச மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கணேசமூர்த்தி தனது வேலைக்காக முள்ளக்காடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரிடம் பொட்டல் காட்டுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழி கேட்டுள்ளனர்.
அதற்கு கணேசமூர்த்தி அவர்களிடம் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென அவரின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த கணேசமூர்த்தி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசமூர்த்தியின் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் சூசை பகுதியில் வசிக்கும் ஆல்பர்ட் மற்றும் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் ஆல்பர்ட் மற்றும் ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.