அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள எழுவம்பட்டி பகுதியில் மாத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதி வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி கிராவல் மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பின் அந்த டிப்பர் லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல்ராஜ், செங்கோல்ராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மைக்கேல் ராஜ் மற்றும் செங்கோல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.