கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வடகரை பகுதியில் டிரைவரான முகமது உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முகமது உசேன் லாரியில் பல சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்குவதற்காக கடையநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது முகமது உசேன் ஓட்டி சென்ற லாரியானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் முகமது உசேன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது உசேனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.