தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு DPI வளாகத்தில் பிளஸ் டூ முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இந்த முறை அமைச்சர் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகளை www.tn results.nic.in, www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.