பயத்திற்கும் கவனக்குறைவுக்கும் இடையேயான வித்தியாசத்தை ரிஷபன்ட் புரிந்து கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷபன்ட் 3 முறை மட்டுமே 30க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். அவரது ஷாட்க்கள் பொறுப்பற்ற வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப கூடிய வீரராக பார்க்கக்கூடிய ரிஷபன்ட் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மூத்த வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசும் போது அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரிஷபன்ட் ஆச்சரியம் அளிக்கும் வகையில் விளையாடக்கூடிய வீரர் என்றும், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் பயமின்றி விளையாடுவதை உறுதி செய்யும் அதே வேளையில் பயம் இன்றி ஆடும் கிரிகெட்க்கும் கவனக்குறைவாக ஆடும் கிரிக்கெட்டுக்கும் இடையான வித்தியாசத்தை வீரர்கள் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும் என்று விக்ரம் அறிவுரை வழங்கினார்.