ரயில் மோதி முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தப் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.