நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அந்த மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுகைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மூளை காய்ச்சல் மற்றும் நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசி திட்டம் 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.