இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கோவிலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் முத்துக்குமார் இருசக்கரவாகனத்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து புதுக்கோட்டையிலிருந்து வந்த காரானது முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமார் பலத்த காயமடைந்துள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து முத்துக்குமாரின் மனைவி மீனா ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை தீவிரமாக தேடிம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.