நடிகை பூஜா ஹெக்டே அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதையடுத்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தெலுங்கில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.