Categories
உலக செய்திகள்

தொடங்கப் போகும் ஒலிம்பிக் போட்டிகள்…. இரு வீரர்களுக்கு தொற்று உறுதி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் இன்னும்  5 நாட்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இதனை அடுத்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு மத்தியில் இந்தப் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் போட்டியாளர்கள் பரிசோதனைக்கு பிறகே அனைவரும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனிஅறையில் தங்கப்படுவார்கள். இந்த நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் ஹோட்டலில் உள்ள தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் இன்னும் வெளியிடவில்லை. மேலும் போட்டியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று எப்படி பரவியது என்பது குறித்து அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ளவோர்க்கு என அமைக்கப்பட்ட கிராமத்தில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |