Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த சூழல் இப்படியே இருக்கணும்” சுதந்தரமாக உலா வரும் விலங்குகள்…. வனத்துறையினரின் கோரிக்கை…!!

கோவை மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கழுதை புலி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கோவை மாவட்ட வனப்பகுதி வழியாகத்தான் செல்கிறது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட வனப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது, கழுதைப்புலி நிற்பது, சிறுத்தை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. எனவே வனவிலங்குகளுக்கு ஏற்ற சூழலை பாதுகாக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதால் பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |