Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் திட்டம் போட்ருக்காங்க…. மடக்கி பிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 நபர்களில் 2 பேர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் திலீப்குமார், பசுபதி மற்றும் ஆசிக் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் 5 பேரும் ஒன்றாக இணைந்து அப்பகுதியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கார்த்திக் மற்றும் சுனில் குமார் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |