லண்டனில் உள்ள வெம்பிளி விளையாட்டு அரங்கில் யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்ற போது பிரச்சினையை ஏற்படுத்திய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் கடந்த 11ஆம் தேதி அன்று யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை எதிர்கொண்டது. இதனை நேரில் பார்க்க சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் விற்பனை ஆனது. எனினும் போட்டி நடைபெறும் சமயத்தில் விளையாட்டு அரங்கிற்குள் சுமார் 2500 நபர்கள் நுழைவுச்சீட்டின்றி புகுந்தார்கள்.
இதனால் பிரச்சனை உண்டானது. மைதானத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு பலகைகளும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிகமானோர் அரங்கத்திற்குள் நுழைந்து விட்டனர். எனவே இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
காவல் துறையினர் அதனை ஆய்வு செய்தனர். அதன்மூலம் சில நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி விளையாட்டரங்கில் நடந்த குற்றங்கள் விரைவில் கண்டறியப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.