சபையார் குளத்தில் முட்புதர்களை கலெக்டரும் சேர்ந்து அகற்றியதால் பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு தானும் மண்வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர நல அதிகாரி கிங்சால் போன்றோரும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து புதர்களை வெட்டி அகற்றியதும் கலெக்டர் அரவிந்த் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தூய்மை பணிகளை மேற்கொண்டதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.