பாகிஸ்தான் அரசாங்கம், பாரிஸ் நாட்டைச்சேர்ந்த பயங்கரவாத தடுப்பு அமைப்பின் பட்டியலில் இருந்து விலகும் நோக்கில் தங்கள் நாட்டில் சட்ட மசோதா ஒன்றை இயற்றியுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பாரிஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் நாட்டை கிரே பட்டியலில் சேர்த்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் உலக வங்கி உட்பட பெரிய இடங்களிலிருந்து நிதி உதவிகளை பெற முடியாது. இந்த பட்டியலில் இருந்து வெளியேற பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு சில நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் நாடாளுமன்ற செனட் சபையில் சர்வதேச குற்றவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குற்றம் சாட்டப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்புடைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.