நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்று தெரிவித்தார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ,
நான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும்; தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். பொது மொழி பற்றிய எனது பேச்சை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதுபிற மொழி கற்கும் பட்சத்தில் இந்திய மொழியான ஹிந்தியை கற்றால் நன்றாக இருக்குமே என்று தான் தெரிவித்தேன்.