மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை செம்பூர், விக்ரோலி பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செம்பூர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.